வரி விதிப்புக்கு அஞ்சி குடியுரிமையைத் துறக்கும் அமெரிக்கர்கள் !

அமெரிக்கக் குடியுரிமை பெற்றோர் எந்த நாட்டில் வசித்தாலும் அமெரிக்காவி லும் வருமான வரிக் கணக்கை அளிக்க வேண்டும், 


அவர்களின் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்ததால் பலர் தமது கடவுச் சீட்டையும் குடியுரிமையைத் துறக்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் சுவிஸ் வாழ் அமெரிக்கர்கள் 411 பேர் தனது குடியுரிமையைத் துறந்துள்ளனர். 

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 180 மட்டுமே இருந்துள்ள தாக சுவிஸ்ஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. 

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அமெரிக்கர்கள் சுமார் 35000 முதல் 40000 பேர் ஆவர்.

இவர்களில் 411 பேர் குடியுரிமைத் துறப்பது பெரிய விடயம் ஆகாது என்று அமெரிக்கத் தூதர் டோனால்டு பெயெர் தெரிவித்தார். 

இம் முடிவை சுவிட்சர்லாந்தில் எடுத்திருப்பது போல வேறு நாடுகளில் வாழும் அமெரிக்கர்கள் எடுக்க வில்லை என்றார் பெயெர்.

இத்தகவலை பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவர் தெரிவித்தார். 

Fatca எனப்படும் வெளிநாட்டுக் கணக்கு வரி இணைப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தின் படி உலகளவில் வங்கிகள்

அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் களின் பணப்பரிவர்த் தனை குறித்த தகவல்களை அமெரிக்க அரசுக்கு அளிக்க வேண்டும். 
 


இதனால் பல சுவிஸ் வங்கிகள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களை கணக்கு வைக்க அனுமதிப்ப தில்லை.

சுவிஸ் குடிமக்கள் உட்பட அமெரிக்கா வில் வாழ்கின்ற வர்களும் சுவிஸ் வங்கிகளின் கணக்கை முடித்து விட்டனர். 

ஜெனீவாவில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அமைப்பின் இயக்குநர் ஜேக்கி புக்னியோன்,

இவ்வாறு குடியுரிமையைத் துறப்பது வெகுநாட்களாக நடந்து வருவது தான் என்றார். 

மேலும், வரி விதிப்புக்கு அஞ்சிய இளைஞர்கள் இப்போது தமது 18 ஆவது வயதில்

தமது அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்கின்ற பழக்கம் தொடங்கி யுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 
Tags:
Privacy and cookie settings