சணலிலிருந்து சானிடரி நாப்கின்... இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !

தேசிய சணல் வாரியம் (என்ஜேபி) காரக்பூர் ஐஐடியுடன் இணைந்து சணலைப் பயன்படுத்தி சானிடரி நாப்கின்களை கண்டு பிடித்துள்ளது. இவை, கருப்பைநோய் புற்றுநோயைத் தடுக்க உதவிகரமாக இருக்கும்.
 
தேசிய சணல் வாரிய செயலாளர் அரவிந்த் குமார் கூறும்போது, “பரிசோதனை முயற்சிகளைச் செய்து விட்டோம். 

ஆரம்பகட்ட தயாரிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்துவருகிறோம்” என்றார். தேசிய சணல் வாரியம் இந்த ஆய்வுக் கான நிதியுதவியை அளித்தது. ஐஐடி காரக்பூர் விஞ்ஞானி பி. அதிகாரி இந்த திட்ட ஆய்வை மேற் கொண்டார். 

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்திய சுகாதாரம் தான் கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே, இப்புதிய கண்டு பிடிப்பு பெண்களின் சுகாதாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். 

மேலும், நசிந்து வரும் சணல் தொழிலுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு புத்துயிரூட்டும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

சணலிலிருந்து செல்லுலோஸ் பிரித்தெடுக்கப் பட்டு, அதன் தரம் மேம்படுத் தப்பட்டு, மிகை உறிஞ்சு திறன் கொண்ட பாலிமருடன் இணைத்து இந்த நாப்கின்கள் தயாரிக்கப் படுகின்றன. 
 
வழக்கமாக, இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி அல்லது மர செல்லு லோஸ்களைப் பயன்படுத்தி சானிடரி நாப்கின்கள் தயாரிக்கப் படுகின்றன. 
Tags:
Privacy and cookie settings