குழந்தைகளை தத்து எடுக்கும் விதிமுறைகளில் மாற்றம்!

நாடு முழுவதிலும் ஆதரவற்ற குழந்தைகள் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. அதேசமயம், அவர்களை தத்து எடுக்க தம்பதியர் பலர் தயாராக இருந்தாலும் அதன் நடைமுறைகளால் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதை தவிர்க்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் புதிய விதி முறைகள் சமீபத்தில் வெளியிடப் பட்டது. 

இதில் முக்கியமாக, பழைய முறையில் இருந்த காவல் துறை சரிபார்த்தல் முறை இனி இந்திய தம்பதியருக்கு தேவை யில்லை என மாற்றப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு தம்பதியர் சம்பந்தப்பட்ட நாடுகளின் காவல் துறையிடம் சரிபார்த்தல் சான்றிதழ் பெறுவது தொடர்கிறது. 

இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய குழந்தைகள் தத்தெடுக்கும் ஆணையத்தின் செயலாளர் வீரேந்திர மிஸ்ரா ‘தி இந்து’விடம் கூறும்போது, “குழந் தைகள் தத்து எடுப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் விரைந்து முடிந்தாலும் இறுதியில் காவல் துறை சரிபார்த்தலில் ஓர் ஆண்டு வரை தாமதம் ஏற்படுகிறது. 

சரிபார்க்கும் பணியில் ஈடுபடும் போலீஸாரால், தம்பதியர் சிலர் மீது இருக்கும் வழக்குகளை உறுதிப்படுத்த முடியாத நிலையும் உள்ளது. இதனால் தத்தெடுக்க முன்வரும் தம்பதியரை அவர் களிடம் அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை. 

தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப் பதிவு முறை இல்லாத வரை, காவல் துறை சரிபார்த்தல் முறையை தொடர்ந்து பின்பற்றுவதால் பலன் கிடைக்காது என்றே கருதுகிறோம்” என்றனர். 

புதிய முறையின்படி, குழந்தைகள் மற்றும் அவர்களை தத்தெடுக்க விரும்பும் தம்பதியர் மீது மேலும் சில குடும்ப ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளும் முறையும் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. இதனால் கால தாமதம் ஏற்படாமல் இருப்பதற்காக, அதிக பட்சம் ஒரு மாதம் என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் ஏற்கெனவே குடும்ப ரீதியான 3,600 ஆய்வுகள் சமூக நலப் பணியாளர்களால் நிலுவை யில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக முடித்து அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என அத்துறையின் மத்திய அமைச்சரான மேனகா காந்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க, மத்திய குழந்தைகள் தத்தெடுக்கும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு நாடு முழுவதி லும் உள்ள சுமார் 400 குழந்தை கள் காப்பகங்களை தம்பதியர் இதுவரை அணுக வேண்டி இருந்தது. 

இதில் சில காப்பகங்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தமக்கு வேண்டிய தம்பதியருக்கு மட்டும் அவர்கள் விரும்பும் குழந்தை களை தத்தெடுக்க உதவுவதாக புகார் எழுந்தது. 
இதை தவிர்க்க புதிய முறைப் படி, தத்தெடுக்க விரும்பும் தம்பதியர் நேரடியாக மத்திய குழந்தைகள் தத்தெடுக்கும் ஆணையத்தின் இணையதளத் தில் பதிவு செய்யலாம். 

இதற்கு தேவையான ஆதார் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் தத்து வழங்குவதற்காக உள்ள குழந்தைகளின் படங்களை வீட்டில் இருந்தபடியே இணைய தளங்களில் பார்க்கும் வசதி ஏற் பட்டுள்ளது.

இத்துடன் ஏற் கெனவே அந்தக் குழந்தைகளை கேட்டு விண்ணப்பித்துள்ள தம்பதியர் பற்றிய விவரங் களையும் அதில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். 
Tags:
Privacy and cookie settings