சீனாவில் உள்ள முக்கிய நதியில் உருவான ராட்சத அலைகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அந்நாட்டின் பிஜியாங் மாகாணத்தில் உள்ள பியாங்காங் நதியிலேயே இந்த அரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த ஆற்றில் அலைகள் ஏற்படுவது சாதராண நிகழ்வாக இருந்த போதிலும் இந்த அளவுக்கு பெரிய சீற்றம் மிக்க அலைகள் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இயற்கை அதிசயத்தை கண்டு ரசிக்க ஆற்றில் 2 கரைகளிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் குவிந்திருந்தனர்.
பாதுகாப்பு வேலிக்கு பின்புறம் இருந்து அவர்கள் பிரம்மாண்ட அலைகளை கண்டு வியந்தனர். இந்த அதிய அலைகளை தரை மற்றும் ஆகாயம் மார்கமாக படம் பிடிக்க சீன அதிகாரிகள் பிரேத்தேய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பாதுகாப்பு வேலிக்கு பின்புறம் இருந்து அவர்கள் பிரம்மாண்ட அலைகளை கண்டு வியந்தனர். இந்த அதிய அலைகளை தரை மற்றும் ஆகாயம் மார்கமாக படம் பிடிக்க சீன அதிகாரிகள் பிரேத்தேய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி ராட்சத அலைகள் அக்ரோசமாக தரையில் மோதி சிதறிய காட்சி காண்பதற்கு ரம்மியமாக இருந்தது.