பேய் பிடித்ததாக கூறப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை !

பேய் பிடித்ததாகக் கூறப்பட்ட இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
பேய் பிடித்ததாக கூறப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூரை அடுத்த சின்னப்பள்ளி பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் - மஞ்சுளா தம்பதியினரின் 19 வயது மகள் வினோதினி.

10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்த வினோதினியின் நடவடிக்கையில் சமீபகாலமாக மாற்றம் காணப்பட்டுள்ளது.

சம்பந்தமே இல்லாமல் தானாக பேசி, சிரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தார் வினோதினிக்கு பேய் பிடித்ததாகக் கூறியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து வினோதினியை பல இடங்களுக்கு பேய் விரட்ட அழைத்துச் சென்றுள்ளனர். 

இது தவிர வீட்டிலும் மந்திரவாதிகளை அழைத்து வினோதினிக்கு பிடித்திருந்த பேயை விரட்ட பூஜைகள் நடத்தியுள்ளனர். 

மேலும், வினோதினிக்கு பிடித்திருந்த பேய்களில் 16 தோஷங்கள் கழிந்து விட்டதாகவும், 
இருப்பினும் தீக்குளித்து இறந்த ஒரு பெண்ணின் ஆவி மட்டும் தங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சம்பவத்தன்று மாரியப்பன் வியாபாரத்திற்காக வெளியில் சென்று விட, மஞ்சுளா சமையலுக்கான விறகுகளை வெட்டிக் கொண்டிருந்துள்ளார். 

அப்போது வீட்டிற்குள் வினோதினியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து மஞ்சுளா வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். 

அப்போது அங்கே உடல் முழுவதும் கருகிய நிலையில் வினோதினி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். 

மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.  பின்னர் இது தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டுப்புத்தூர் போலீசார், வினோதினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தார் கூறுகையில், வினோதினிக்கு பேய் பிடித்ததால் மனநிலை பாதிக்கப் பட்டிருந்ததாகவும், பேய் பீதியில் அவர் தீக்குளித்து இறந்து போனதாகவும் தெரிவித்துள்ளனர். 
Tags:
Privacy and cookie settings