நடிகர் விஷால் மீது சரத்குமார் அவதூறு வழக்கு!

0 minute read
'என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் மீது சரத்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 சரத்குமார், விஷால் | கோப்புப் படம்
நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் குறித்து சரத்குமார், விஷால் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் , சரத்குமார் சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் விஷால் மீது புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

மனுவில் சரத்குமார், "விஷால் என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். என் நற்பெயருக்கு களங்கும் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பும் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், ரூ.10 கோடி நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். 

நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கும் நிலையில், சரத்குமார் கிரிமினல் வழக்கு தொடர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings