பிறந்த நாளில் கண் கலங்கிய சிநேகா!

1 minute read
ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலும், அல்லது திறன் குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடுவது சிநேகாவின் வழக்கம்.
 Sneha celebrates birthday with physically challenged children
அந்த வகையில் இந்த ஆண்டும் சிநேகா தனது பிறந்த நாளை இன்று திறன் குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார். சமீபத்தில் விஹான் என்ற ஆண் குழந்தைக்குத் தாயான பின்பு வெளியே எங்கும் தலை காட்டாமல் இருந்து வந்தார் சிநேகா. 
 Sneha celebrates birthday with physically challenged children
இன்று அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் ட்ரஸ்ட்டில் உள்ள மன நலம் குன்றிய குழந்தைகள் நடுவே தனது கணவர் பிரசன்னாவுடன் வந்து கொண்டாடினார். 
 Sneha celebrates birthday with physically challenged children
அவர்களுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் மகிழ்ந்தார். நிறைவாக ட்யூப் மூலமாக உணவு பெற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகள் நிரம்பிய அறைக்குச் சென்ற சிநேகா அவர்களின் நிலையைப் பார்த்ததும் தாங்க முடியாமல் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். 
 Sneha celebrates birthday with physically challenged children
மகிழ்வாக கொண்டாட வந்தவர் அழத் தொடங்கியதும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் கலங்கிவிட்டனர். பின் பிரசன்னா அவரைத் தேற்றி காரில் அழைத்துச் சென்றார்.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings