அம்மா உணவகத்திற்கு குப்பை லாரியில் உணவு பொருட்கள் !

0 minute read
தர்மபுரி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை குப்பை லாரியில் துப்புரவு பணியாளர்கள் கொண்டு வந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
தர்மபுரி நகர பேருந்து நிலையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. 

இங்கு உணவுக்கு தேவையான அரிசி, பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கழிவுகள் ஏற்றி செல்லும் லாரியில் துப்புரவு பணியாளர்கள் கொண்டு வந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

குப்பை லாரியில் உணவு பொருட்களை ஏற்றினால் நோய் தாக்கம் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தவறு செய்த  நகராட்சி அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்\
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings