தப்பைச் சுட்டிக் காட்டியதற்காக இன்டர்ன்ஷிப்பை அன்லைக் செய்த பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் கிடைத்தும் கூட அதை வாய்க்கு எட்டா த நிலையை சந்தித்துள்ளார் ஒரு மாணவர். அவர் செய்த ஒரு "தவறு"தான் இந்த நிலைக்குக் காரணம்..
அவர் செய்த அந்தத் தவறு.. பேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக் காட்டியதுதான். பேஸ்புக்கே கதியாகக் கிடக்கும் நபர்களைக் கொண்ட து தற்போதைய உலகம். வீட்டில் உள்ளவர்களுடன் பேசக் கூட மாட்டார்கள்.

ஆனால் பேஸ்புக்கில் வந்து கதை விட்டு கலாய்த்து, கலகலப்பாக திரிவோர் தான் நிறைய. இப்படிப்பட்ட நிலையில் நான் பேஸ்புக்கி்ல் வேலை பார்க்கி றேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய விஷயம். 

அப்படித்தான் இந்த மாணவரும் தனக்குக் கிடைத்த இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கு றித்து பெருமை அடைந்திருந்தார். ஆனால் பேஸ்புக் தனது முகத்தை திருப்பிக் கொண்டு விட்டது. இவரை அன்லைக் செய்து விட்டது.

அவரது பெயர் அரன் கன்னா. ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் இவர். இவ ருக்கு பேஸ்புக்கில் இன்டர்ன்ஷிப் கிடைத்தது. இதனால் பெருமையாக இருந் தார் அரன் கன்னா.

3 மாதங்களுக்கு முன்பே இவர் பேஸ்புக்கி்ல் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக இவர் செய்த ஒரு காரியம்தான் இவருக்கு ஆப்பு வைத்து விட்டது.

அதாவது மரூடர்ஸ் மேப் ‘Marauder's Map' என்ற அப்ளிகேஷனை இவர் உருவாக் கினார். இதை பயன்படுத்தி பேஸ்புக் மெசஞ்சரில் இணையும்போது, நமக்கு மெசேஜ் அனுப்புவோர் எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை அறிய முடியும்.

இது பெரும் பாதுகாப்பு குளறுபடியாகும். உண்மையில் இதைக் கண்டுபிடித்தார் அரன் கன்னா. ஆனால் இது பேஸ்புக்குக்குப் பிடிக்கவில்லை. இந்தக் கண்டுபி டிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவும் செய்தார். இதையடுத்து பல ரும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்தனர்.
இதையடுத்து அடுத்த 3 வது நாளில் அரன் கன்னாவுக்கு வழங்கப்பட்ட இன்டர்  ன்ஷிப்பை ரத்து செய்து விட்டது பேஸ்புக் நிறுவனம். மேலும் பேஸ்புக்கில் இருந்த லொகேஷன் எக்ஸ்டென்ஷனையும் பேஸ்புக் நீக்கி விட்டது.

இன்டர்ன்ஷிப்பை ரத்து செய்தது குறித்து பேஸ்புக் நிறுவனம் அளித்த விளக் கத்தில், அரன் கன்னா பிரைவஸி பாலிசியை மீறி விட்டார். பேஸ்புக் டூலை இவர் தவறாகப் பயன்படுத்தி விட்டார் என்பது.

ஆனால் உண்மையில் பேஸ்புக் நிறுவனத்தின் மிகப் பெரிய தவறு ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளார் அரன் கன்னா என்பதே உண்மை. அதை சரி செய்யாமல், அதைச் சுட்டிக் காட்டிய அரன் கன்னாவைப் பாராட்டாமல், அவருக்கான இன்டர்ன்ஷிப்பை பேஸ்புக் ரத்து செய்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த இளம் வயதில் அருமையான முறையில் பேஸ்புக்கின் தவறைக் கண்டுபிடித்த அரன் கன்னாவைப் பணியில் அமர்த்தி அவர் மூலம் பல பலன்களை அடைந்திருக்கும் வாய்ப்பை பேஸ்புக்தான் இழந்து விட்டதாகவும் பலர் கூறி வருகிறார்கள்.. பேஸ்புக்கில்!
Tags:
Privacy and cookie settings