பொதுவா கணிணி வாங்கிய உடனே நாம் பார்ப்பது படமாக தான் இருக்கும் அப்படி படங்களை பார்பதற்கும் நமது டேட்டா பேக்கப் எடுபதற்கும்,
கணிணியில் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய, பாடல்களை கேட்க என எல்லாவற்றுக்கும் DVD டிரைவ் தேவையானது.
பொதுவாக இது மூன்று வகைகளில் வருகிறது.
1. ரீடர் ஒன்லி
2.கம்போ டிரைவ் (DVD read cd write )
3.ரைட்டர் விலையில் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்றாலும் ரீடர் ஒன்லி அலுவலகங்களுக்கு (பாதுகாப்பு காரணங்களுக்காக ) அதிகம் பயன்படுகிறது . மற்றபடி எல்லோரும் வாங்குவது ரைட்டரைதான் .
ரைட்டரில் அதிகம் விரும்பி வங்கப் படுவது சோனி, சாம்சுங் மற்றும் ஹட்ச்பி. பொதுவான ரைட்டரில் ஏற்படும் பிரச்சினை என்று பார்த்தால் இரண்டு மட்டுமே .
ஒன்று DVD read ஆகாது . இதற்கு உங்கள் DVD ரைட்டரின் லென்ஸ் சுத்தமாக துடைத்து வந்தால் பிரச்சினை வராது . இதற்காக தனியே கிளீனிங் DVD உள்ளது .
இரண்டு , DVD டிரைவில் ஏற்படும் ஓபன் மற்றும் க்ளோஸ் பிரச்சினை . இதை நாமே எளிதாக சரி செய்து விடலாம் .
இதற்கு காரணமான ரப்பரை மாற்றினாலே போதும், இதன் விலையும் 10 ரூபாக்குள் முடிந்து விடும் .
தற்போது ஒரு DVD யில் 4.5 GB ரைட் செய்ய முடியும் ,அதுவே டுயல் லேயர் DVD எனில் 8.5 GB ரைட் செய்ய முடியும் .தற்போது இவ்வகை DVD களை நாம் சினிமா படங்கள் வாங்கும் போது பார்க்கலாம் .
இனி வரும் காலங்களில் ப்ளூ ரே டிஸ்க் களும் எளிதாக புழக்கத்தில் வர ஆரம்பிக்கும் . ஒரு பளு ரே டிஸ்க் கில் ஒரு லேயர் எனில் 25 GB ம் இரண்டு லேயர் எனில் 50 GB ம் ரைட் செய்து கொள்ளலாம் .
இன்னும் நாம் 8.5 GB டிஸ்க் கில் நின்று கொண்டிருக்க, அடுத்த கட்ட டெக்னாலஜி ஆக Holographic Versatile டிஸ்க் கள் வர துவங்கி விட்டன .
சுமாராக இதில் 1 TB(1024 GB) அளவு டேட்டா ஸ்டோர் செய்து கொள்ளலாம் . நாமல்லாம் எப்ப ப்ளூ ரே டிஸ்க் வந்து அப்புறம் HV டிஸ்க் வரத்துக்குள்ள அடுத்த பத்து டெக்னாலஜி வந்து போயிருக்கும் .
நாம் வாங்கி அஸம்பிள் செய்ய போகும் DVD ரிட்டர் சோனி - 1100 RS கீபோர்ட் இல் PS/2 மற்றும் USB என இரு வகைகள் வந்தாலும் .அதிகம் உபயோகப்படுவது USB வகை கீ போர்ட்களே .
wireless வகை கீபோர்ட் களை தவிர்ப்பது நலம் ஒரு சில பிளஸ் பாயிண்ட் கள் இருந்தாலும் அதற்கு பாட்டரி சார்ஜ் விரைவில் இறங்கி விடுவதால் பாட்டரி அடிகடி மாற்றி கொண்டே இருக்க வேண்டும் .
அதே போல் மௌஸ் வாங்கும் போது ஒப்டிகால் USB வகை மௌஸ் களே மிகவும் சிறந்தது .
பல் மௌஸ் வகைகளில் எளிதில் பால்களின் அடியிலும் மௌஸ் இன் உள்ளேயும் அழுக்கு படிந்து பழுதடைந்து விடும் .
கீபோர்ட் மற்றும் மௌஸ் இல் மைக்ரோசாப்ட் மற்றும் logitech இரண்டும் சிறந்து விளங்குகின்றன .
இரண்டின் விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை . எனவே நமக்கு பிடித்த மாடல்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் .
கீபோர்ட் வாங்கும் போதே மல்டிமீடியா கீபோர்ட் வாங்கி கொண்டால் படங்கள் பார்க்கும் போது மிகவும் உபயோகமாக இருக்கும்.
வாரம் ஒருமுறை மெலிதான துணி முலம் இவற்றை துடைப்பதன் முலம் தூசி படியாமல் பாதுகாக்க வேண்டும் . நாம் வாங்க போகும் கீபோர்ட் மற்றும் மௌஸ் இன் விலை - 700 RS .