தற்போது ரஜினியின் கபாலி படத்தை ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினி ரசிகர்கள் அதனை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை தயாரிப்பது லைக்கா நிறுவனம்தான். எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை அனுகிய இயக்குநர் ஷங்கருக்கு ஏமாற்றமே தற்போதைய பதிலாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி எனக்கு இந்திய சினிமாவில் நடிக்க வேண்டுமானால் 100 கோடி சம்பளம் தர வேண்டியிருக்கும் பரவாயில்லையா? என்று கேள்வி கேட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன.
இதனால் தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த பதிலும் இன்னும் வராமலிருக்க படத்தின் இதர ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறாராம் ஷங்கர். அதுமட்டுமின்றி அர்னால்ட் இல்லைன்னா விக்ரம் என்ற யோசனையிலும் ஷங்கர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.