காலை 7 மணிக்கு தொடங்கிய நடிகர் சங்கத் தேர்தல் சற்று முன்னர் மாலை 5 மணியுடன் நிறைவுற்றது. சற்றுமுன்னர் கிடைத்த தகவலின் படி சுமார் 2751 வாக்குகள் பதிவாகி இருப்பதாக நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்து இருக்கிறார்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி 90 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 388 பேர் வாக்களிக்க முன்வரவில்லை என்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் தகவல் வெளியிட்டுள்ளார். செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 29 பதவிகளுக்கு போட்டி நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணியுடன் தற்போது முடிவடைந்து இருக்கிறது. மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவுகள் இரவு 9 மணியளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை நடிக, நடிகையர் வாக்களிப்பில் தபால் ஓட்டுக்களையும் சேர்த்து சுமார் 2751 வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்து இருக்கிறார்.
மாலை 6 மணியளவில் ஓட்டுக்கள் எண்ணப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்து இருப்பதால், இரவு 9 மணியளவில் முடிவு தெரிந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரஜினி,கமல், விஜய், சூர்யா தொடங்கி முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.
நடிகையரில் கே.ஆர்.விஜயா, கவுதமி, வரலட்சுமி, ஜோதிகா என பழம்பெரும் நடிகையர் தொடங்கி இளம்நடிகைகள் பலரும் தங்கள் வாக்கை ஆர்வத்துடன் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.