ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பல துறைகளுக்கான நோபல் பரிசுகள் தினமும் அறிவிக்கப்பட்டு
வரப்படும் நிலையில், 2015ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆங்கஸ் டீட்டனுக்கு (69) அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு, வில்லியம் சி.கம்ப்பெல், சடோசி ஓமுரா மற்றும் யுயு து ஆகியோருக்கும், இயற்பியல் துறைக்கான் நோபல் பரிசு, கனடாவின், ஆர்தர் மெக்டொனால்டு
மற்றும் ஜப்பானின் டகாகி கஜீதா ஆகியோருக்கும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மரபணு பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு துனிசிய தேசியக் கலந்துரையாடல் அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டு பெண் எழுத்தாளர் ஸ்வெட்லாலானா அலெக்ஸிவிச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று வெளியான அறிவிப்பில், 2015ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆங்கஸ் டீட்டனுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிரின்ஸ்டென் பல்கலைகழகத்தில் தற்போது பணியாற்றி வரும் ஆங்கஸுக்கு, நுகர்வு, வறுமை, மக்கள் நலம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதற்காக இந்த நோபல் பரிசு கிடைத்துள்ளது.