கர்நாடக உடுப்பியில் தாத்ரி மாடல்:பசுவை வாங்கிய முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்!

அறுப்பதற்காக பசுவை வாங்கினார் என்று குற்றம் சாட்டி முஸ்லிம் இளைஞர் மீது பஜ்ரங்தள் குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடலோர கிராமமான கர்கலாவில் செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.

கால்நடைகளை வளர்த்துவதை தொழிலாக கொண்ட இப்ராஹீம் என்ற முஸ்லிம் வாலிபரை 30க்கும் மேற்பட்ட பஜ்ரங்தள் குண்டர்கள் தாக்கியதாக இந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது.


இரும்பு கம்பி மற்றும் சங்கிலியை பயன்படுத்தி இப்ராஹீமை தாக்கியுள்ளனர்.போலீஸ் வந்து இப்ராஹீமை காப்பாற்றியுள்ளது.

இரண்டு இந்து வியாபாரிகளிடமிருந்து வாங்கிய மூன்று பசுக்கள் மற்றும் இரண்டு மாடுகளுடன் சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்துள்ளது.இப்ராஹீம் மீது திருட்டுக் குற்றத்தில் வழக்கு பதிவுச் செய்யுமாறு பஜ்ரங்தளைச் சார்ந்தவர்கள் போலீஸை வற்புறுத்தியுள்ளனர்.


தாக்குதலுக்கான பொறுப்பை உடுப்பி மாவட்ட பஜ்ரங் தள் கண்வீனர் கே.ஆர்.சுனில் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளான்.’பசுக்களை பாதுகாக்கும் எங்களின் 16-வது ஆபரேசன் இது’ என்று தெரிவித்துள்ள சுனில், எங்களுடைய தாக்குதலை இப்ராஹீம் இனி மறக்கமாட்டார்.

இது பிறருக்கும் பாடம் என்று கூறியுள்ளான்.இச்சம்பவம் தொடர்பாக 10 பஜ்ரங்கள் குண்டர்களை கைதுச் செய்துள்ளதாக உடுப்பி மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.பெர்மின் இல்லாமல் ஜீப்பில் கால்நடைகளை கொண்டு சென்றதாக இப்ராஹீம் மீதும் போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.


இந்நிலையில் பசுவை அறுப்பதற்கு வாங்கவில்லை என்று இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.தலைமுறைகளாக பசுக்களை வளர்த்துவதே தங்களுடைய தொழில் என்றும் 

விலைக்கு வாங்கிய பசுக்களில் ஒன்று கர்ப்பிணி என்றும் தெரிவித்த இப்ராஹீம், கர்ப்பிணியான பசுக்களை அறுப்பதை இஸ்லாம் தடைச் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings