வீடியோவை வால் பேப்பராக அமைக்க !

நகராத படத்தை வால் பேப்பராக வைத்து போரடித்துப் போனவர்களுக்கு, தங்களுக்கு பிரியமான வீடியோவை கணினியின் வால் பேப்பராக பிரபலமான VLC Media Player ஐ பயன்படுத்தி அமைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். 
வீடியோவை வால் பேப்பராக அமைக்க !
VLC மீடியா ப்ளேயரில் Tools மெனுவிற்கு சென்று Preferences பகுதிக்கு செல்லுங்கள். 

இப்பொழுது திறக்கும் Preferences விண்டோவில் இட்டு புற பேனில் உள்ள Video பட்டனை அழுத்தவும்.

வீடியோவை வால் பேப்பராக அமைக்க !

இப்பொழுது Video settings பகுதியில் Output என்பதற்கு நேராக DirectX Video output என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு Save செய்து விட்டு VLC ஐ Close செய்து மறுபடி திறக்கவும்.

இனி உங்களுக்கு தேவையான வீடியோவை VLC ப்ளேயரில் திறந்து ப்ளே செய்யும் பொழுது, திரையில் வலது க்ளிக் செய்து Context menu வில் Video, மற்றும் DirectX Wallpaper ஐ க்ளிக் செய்யுங்கள். 
வீடியோவை வால் பேப்பராக அமைக்க !
Wall paper தோன்றியவுடன் VLC ப்ளேயரை minimize செய்து விடுங்கள். 

வீடியோவை வால் பேப்பராக அமைக்க !
அவ்வளவுதான். இனி நீங்கள் விரும்பிய வீடியோ உங்கள் வால் பேப்பராக  உங்கள் கணினியில்..

Tags:
Privacy and cookie settings