கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் மீது இனி நடவடிக்கை பாயும்: அரசு உறுதி!

கறுப்புப் பணம் குறித்து அதை பதுக்கியவர்கள் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ரூ.3,770 கோடி வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், 
 
தாங்கள் பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப் பணம் குறித்து தகவல் அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் செயலர் ஹஷ்முக் அதியா, "வெளிநாட்டில் உள்ள சொத்துகளை தாமாக முன்வந்து ஒப்படைப்பதற்காக 90 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. 

ஜூலை 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் இந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதை பயன்படுத்திக் கொண்டு 638 பேர் தாக்கல் செய்த தகவலின்படி அரசு ரூ.3770 கோடி வசூலித்துள்ளது. நல்லதொரு வாய்ப்பு அரசு வழங்கியது. அதை சிலர் பயன்படுத்திக்கொண்டனர். 

ஆனால் சிலர் கறுப்புப் பணத்தை பதுக்கிவிட்டு அதைப் பற்றி தகவல் அளிக்காமல் இருக்கின்றனர். அவர்கள் குறித்த தகவல் கிடைத்தால் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 
Tags:
Privacy and cookie settings