நினைவு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் பரீட்சை எழுதும் போதோ , interview நேரத்திலோ அல்லது எதையாவது தேடும் போதோ உணர்ந்திடுவோம் .
நமக்கே நினைவு முக்கியமென்றால் நம் நினைவுகளை சேர்த்து வைக்கும் கணிணியின் நினைவு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
நினைவுகளின் வகைகளை தற்போது மூன்றாக பிரிக்கலாம் . ஆனால் இவற்றில் அதிகம் பயன்படுத்தபடுவது ddr வகை ராம் களே .
அதிலும் இந்த ddr வகை ராமில் ddr 2 மற்றும் ddr 3 என இரு வகை பயன் படு உள்ளது.
தற்போது அதிகம் வாங்கப் படுவது ddr 2 வகை ராமக இருந்தாலு ம் நமது மதர் போர்டு ddr 3 சப்போர்ட் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும்.
நமது கணிணி அடிகடி restart ஆனாலோ அல்லது ஸ்டார்ட் ஆனவுடன் தொடர்ந்தோ அல்லது இருமுறை பீப் சவுண்ட் கேட்டால் இந்த ராமை நன்கு சுத்தம் செய்து ஸ்லோடில் போட வேண்டும் .
அதே போல் கணிணி நினைவை அப்கிரேட் செய்யும் போது அது எத்தனை பஸ் ஸ்பீடோ அதற்கு ஏற்ற பஸ் ஸ்பீட் ராம் பார்த்து போட வேண்டும் .
உதாரணமாக ddr 2 என்பது 667 mhz , 800 mhz அளவில் கிடைக்கிறது, அதே போல் ddr 3 1333 mhz அளவில் வருகிறது.
ஆபெரடிங் சிஸ்டத்தை பொருத்து முன்கூட்டியே மெமெரியை தேர்வு செய்து கொள்ள வேண்டும் . நாம் வாங்கி அசெம்பிள் செய்யப் போகும் நினைவு Transcend ddr 2 2 GB(800 mhz) - 2100 rs.
Tags: