மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முஸ்லிம் முதியவர் அடித்தே கொலை..!

முஸ்லிம் சமுதாயமே நீ தூங்கி கொண்டிரு.... உத்தர பிரதேச மாநிலம் தத்ரி என்ற ஊரில் வீட்டில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி 50 வயதான முஹம்மது அக்லாக் என்ற முஸ்லிம் முதியவரை இந்துத்துவா பயங்கரவாத கும்பல் அடித்தே கொன்றுள்ளனர்.

 

படுகொலை செய்யப்பட்ட முஹம்மது அக்லாக் மற்றும் அவருடைய 22 வயது மகனையும் இந்துத்துவ பயங்கரவாதிகள் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் அக்லாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனின் உயிர் ஊசலாடுகிறது. 

அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் அறிந்து போலீஸார் வந்தபோது போலீஸார் வந்தும் கூட பயப்படாமல் அந்தக் கும்பல் இருவரையும் போட்டு சரமாரியாக அடித்த செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது. 

இந்தியாவில் முஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்திற்காக முஸ்லிம்கள் கொல்லப்படாத நாளே கிடையாது என்ற நிலையே உருவாகியுள்ளது.
Tags:
Privacy and cookie settings