டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் ரூ.44.95க்கு விற்று வந்த டீசல் 95 பைசா அதிகரித்து ரூ.45.90—ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
ஆனால், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
கடந்த 4 மாதங்களில் இரண்டாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டது. அப்போதும் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம்,

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திருத்திமைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆகிய தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது.