நியூசிலாந்தில் இரண்டு பாட்டில்களில் கோமியம் வைத்திருந்த இந்திய பெண்ணுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் நியூசிலாந்து சென்றுள்ளார்.
வெல்லிங்டனில் உள்ள விமான நிலையத்தில் அவர் தான் இரண்டு பாட்டில்களில் கோமியம் வைத்திருந்ததை உடைமைகளை பரிசோதிப்பவர்களிடம் தெரிவிக்கவில்லை. பின்னர் பரிசோதனையில் அவர் கோமியம் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த பெண் மருத்துவ காரணத்திற்காக கோமியத்தை கொண்டு சென்று சிக்கியுள்ளார்.
மருத்துவ காரணத்திற்காக கோமியத்தை எடுத்து வந்தால் அதை அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தேவையில்லை என்று மக்கள் நினைப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.