ஆரோக்கியமான நாடுகள் பட்டியல்...இந்தியா 103வது இடம் ?

ஐக்கிய நாடுகள் சபையின் உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட உலக ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
 ஆரோக்கியமான நாடுகள் பட்டியல்: இந்தியா 103வது இடம்!!?
இந்த பட்டியலில் ஆசிய நாடுகளில் வளர்ந்த நாடு என்றும், வளரும் நாடுகளில் முன்னணியில் உள்ள நாடு என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவோ 103வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிறப்பு, இறப்பு விகிதம், இறப்புக்கான காரணம், புகைப்பவர்களின் எண்ணிக்கை, கொழுப்பு பாதிப்பு மற்றும் சத்துக் குறைபாடு என பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிங்கப்பூர் 89.45% புள்ளிகளுடன் முதல் இடத்தையும், இத்தாலி 89.07% புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 88.33% புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

103வது இடத்தைப் பிடித்த இந்தியா பெற்றுள்ள புள்ளிகள் வெறும் 22.17% தான்.
Tags:
Privacy and cookie settings