மலையாளம் மற்றும் தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'நேரம்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான படம் 'நேரம்'.
தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'நேரம்' தமிழ் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதியாகி இருக்கிறது.
நிவின் பாலி வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அனில் கண்ணேகண்டி இயக்கவிருக்கும் இப்படத்துக்கு சாய் கார்த்திக் இசையமைக்க இருக்கிறார்.
டிசம்பர் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.