தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையும், அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலையும் மையம் கொண்டுள்ளதால் தமிழ கத்தின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து இன்று வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. காலை 6 மணி அளவில் வானம் மேக மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மழையும் பெய்து கொண்டே இருந்தது.காலை 6.30 மணியளவில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது..
சென்னையில் இன்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. காலை 6 மணி அளவில் வானம் மேக மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மழையும் பெய்து கொண்டே இருந்தது.காலை 6.30 மணியளவில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது..
வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. வேலூர், அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
ர்தானா, ராஜா தோப்பு, அணைகள் ஏற்க னவே நிரம்பி விட்ட நிலையில் கனமழையால் இந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்கிருந்து உபரிநீர் வெளி யேற்றப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் திருவண்ணா மலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர், பகுதியில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்று விடிய விடிய பெய்தது இன்று காலையில் சில இடங் களில் பரவலாக மழை பெய்தது.
வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் இன்று விடுமுறை அறிவிப்பை வெளியிட்டனர். தமிழகத்தில் மொத்தம் 13 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடபட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, அரியலூர், திருச்சி, நாகை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுறை விடப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.