ஷாருக்கான் நடித்த சிவப்பழகு விளம்பரத்திற்கு ரூ.15லட்சம் அபராதம்!

நான்கு வாரங்களில் உங்கள் சருமம் சிவப்பாகும் என்ற விளம்பரம் போலியானது என தொடரப்பட்ட வழக்கில் இமாமி நிறுவனத்துக்கு  15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 ஷாருக்கான் நடித்த சிவப்பழகு விளம்பரத்திற்கு ரூ.15லட்சம் அபராதம்!!
ஆண்கள் பயன்படுத்தக் கூடிய, பேர்னஸ் கிரீமை பயன்படுத்தினால், நான்கு வாரங்களில் உங்கள் முகத்துக்கு சிவப்பழகு கிடைக்கும் என்று நடிகர் ஷாருக்கான் நடித்த விளம்பரத்தை இமாமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்து நிகில் என்ற 23 வயது மாணவர், இமாமி சிவப்பழக்கு கிரீமை வாங்கி பயன்படுத்தியுள்ளார். ஒரு மாத காலமாகியும் சிவப்பழகு கிடைக்கவில்லையாம். விளம்பரத்தில் கூறியது போல, மாணவரின் முகம் சிவப்பழகு  பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து நிகில் டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த மாணவர் வழக்கு தொடர்ந்தார். நடிகர் ஷாருக்கான் நடித்த இமாமி நிறுவன விளம்பரம் போலியானது. அந்த விளம்பரத்தை வெளியிட இமாமி நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு வழக்குச் செலவுக்கு பணம் தர வேண்டும் என்று தனது மனுவில் நிகில் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இமாமி நிறுவனத்துக்கு ரூ. 15 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அதோடு வழக்கு செலவுக்கு மாணவர் நிகிலுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் அந்த விளம்பரத்தை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது.

Tags:
Privacy and cookie settings