ஜம்முவில் வயலுக்குள் பாய்ந்த பேருந்து: 16 பேர் காயம் !

0 minute read
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் பேருந்து ஒன்று சாலையில் இருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இது பற்றி போலீசார் கூறும்போது, தனமண்டி பகுதியில் இருந்து ரஜவுரி நோக்கி மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இன்று காலை 9 மணியளவில் மாவட்டத்தின் நீரோஜல் பகுதியில் பேருந்து சென்ற பேருந்து சாலையில் இருந்து கவிழ்ந்து வயலுக்குள் சென்று விழுந்தது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளனர்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings