ஆந்திர பிரதேசத்தின் நந்தலூர் மற்றும் கடப்பா ரெயில் நிலையங்களுக்கு இடையே கொச்சுவேலியில் இருந்து கவுகாத்தி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. இது பற்றி ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடந்த நவம்பர் 15ந்தேதி கொச்சுவேலி அருகே 12 மணியளவில் புறப்பட்டு சென்ற கொச்சுவேலி-கவுகாத்தி வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நந்தலூர் மற்றும் கடப்பா ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்றிரவு 11.30 மணியளவில் தடம் புரண்டது.
இதில் ரெயிலின் எஸ்.6 மற்றும் எஸ்.7 ஆகிய இரு பெட்டிகள் தடம் புரண்டன. இதுவரை காயம் அடைந்தவர்கள் குறித்த தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உதவி எண்களை ரெயில்வே அறிவித்துள்ளது. தேவைப்படுவோர் 0471-2320012 மற்றும் 9567869375 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் தடம் புரண்ட சம்பவத்தை தொடர்ந்து ஐதராபாத்திற்கு செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.