நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் திருமணம் சென்னையில், 22-ந் தேதி !

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் திருமணம், சென்னையில் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இவர், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் நிஷா கிருஷ்ணனை காதல் திருமணம் செய்து கொள்கிறார்.
கணேஷ் வெங்கட்ராமன்

நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்த ‘அபியும் நானும்’ படத்தில், திரிஷாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர், கணேஷ் வெங்கட்ராமன். தொடர்ந்து ‘உன்னைப்போல் ஒருவன்,’ ‘இவன் வேற மாதிரி,’ ‘பனித்துளி,’ ‘தீயா வேலை செய்யணும் குமாரு,’ ‘அச்சாரம்,’ ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவருக்கும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் நிஷா கிருஷ்ணனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

22-ந் தேதி

கணேஷ் வெங்கட்ராமன்- நிஷா கிருஷ்ணன் திருமணம் வருகிற 22-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நடக்கிறது.

முன்னதாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது
Tags:
Privacy and cookie settings