திருமணம் செய்த 3 மனைவிகளும் என்னை பிரிந்துசென்று விட்டதால், பெண்களை பழிவாங்குவதற்காக எய்ட்ஸ் நோயை பரப்பினேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள உப்பால் என்ற பகுதியில் வசித்து வரும் ஜோசப் ஜேம்ஸ் (31) என்ற ஆட்டோ ஓட்டுனரை திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக பொலிசார் கைது செய்தனர்.
இவரிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொறியியல் படித்த ஜோசப்புக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது முதல் மனைவி அவரை பிரிந்துசென்று விட்டார்.
பின்னர், 2 பெண்களை மறுமணம் செய்தார், ஆனால் அவர்களும் இவரை விட்டு பிரிந்துசென்றுவிட்டதால், விபசார விடுதிகளுக்கு சென்று தனது இரவுப்பொழுதை கழித்துவந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, தனது வாழ்க்கை இவ்வாறு சீழிந்துபோனதை எண்ணி கோபம் கொண்ட ஜோசப், தவறான நடத்தையில் ஈடுபட்ட குடும்ப பெண்களை மிரட்டி தனது காம வலையில் வீழ்த்தி அவர்களுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பியுள்ளார்.
சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இவர் எய்ட்ஸ் நோயை பரப்பியுள்ளார். மேற்கூறிய தகவல்களை ஜோசப் தனது வாக்குமூலமாக போலீஸில் அளித்துள்ளார்.
ஆனால் ஜோசப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.