ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பலி !

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பொம்மரெட்டி கூடம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 3 வயது குழந்தை ராகேஷ், நேற்றுமுன்தினம் காலை அதேபகுதியில் தனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஆழ்குழாய் கிணற்றில் குழந்தை தவறி விழுந்து விட்டது. உடனே குழந்தையின் பெற்றோர் கயிறு கட்டி மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது குழந்தை 30 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது. முதலில் குழந்தைக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

பின்னர் ஆழ்குழாய் கிணற்றின் அருகில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டது. விடியவிடிய பள்ளத்தை தோண்டிய மீட்புக்குழுவினர் நேற்று காலை குழந்தையை மீட்டனர். 

ஆனால் அதற்குள் குழந்தை இறந்து விட்டது. பல மணி நேரம் போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியாததால் பெற்றோர் கதறி அழுதனர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
Tags:
Privacy and cookie settings