'டைனமைட்' எஸ்எம்எஸ்.....விமானத்திலிருந்து இறக்கப்பட்டு 4 பயணிகளிடம் விசாரணை !

பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் விமானத்திலிருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் செயல்பட்ட 4 பயணிகள் இறக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். கடந்த வாரம் நடந்த இந்தச் சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. 
 
அதாவது மற்றொரு பயணி, இந்த நால்வரில் ஒருவரது போனில் வந்த மெசேஜில் 'டைனமைட்' என்ற வார்த்தையும் இந்தியாவில் உள்ள விமான நிலையம் ஒன்றின் சமிக்ஞை சொல்லும் இடம்பெற்றதாக புகார் தெரிவித்தார் என்று போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

நவம்பர் 17-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் நால்வரில் ஒருவர் மீது சந்தேகத்தை கிளப்பிய பெண் பயணி, தனக்கு அருகில் இருந்த மற்றொரு பயணி ஆங்கிலம்

அல்லாத மற்றொரு மொழியில் பல போன்களைச் செய்ததாகவும் பிறகு தான் பார்க்கும் போது அவரது போனுக்கு 'பிஎல்ஆர். டைனமைட்' என்று ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் வந்ததாகவும் புகார் அளித்தார்.

பிஎல்ஆர் என்பது பெங்களூரு விமான நிலையத்தைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இதனையடுத்து விமானத்திலிருந்து இந்தப் பெண் சுட்டிய 4 பேர் இறக்கப்பட்டு போக்குவரத்து ஆணைய போலீஸ் அதிகாரிகளாலும் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவினராலும் விசாரிக்கப்பட்டார்.

ஆனால், அவரது போனை சோதித்த போது அந்த ‘டைனமைட்’ மெசேஜ் காணப்படவில்லை. பிறகு நால்வரும் விடுவிக்கப் பட்டனர்.
Tags:
Privacy and cookie settings