மும்பை மலாட் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி இவரது தந்தை இறந்துவிட்டார், தாய் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சிறுமி தனது அத்தையின் வீட்டில் தங்கி மலாட் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.
இந்நிலையில் சிறுமியுடன் பள்ளியில் படிக்கும் நண்பன் ஒருவர் பாடத்தில் சந்தேகம் கேட்டு அவரை கடந்த 8ம் தேதி தனது நண்பனின் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
சிறுமியும் நண்பன் தானே என நினைத்து அவர் கூறிய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியின் நண்பன் தனது நண்பர்கள் 3 பேருடன் காத்திருந்தார்.
சிறுமியும் நண்பன் தானே என நினைத்து அவர் கூறிய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியின் நண்பன் தனது நண்பர்கள் 3 பேருடன் காத்திருந்தார்.
அவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து உள்ளனர்.இதை யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டினர். இதனால் சிறுமி நடந்த சம்பவத்தை பற்றி யாரிடமும் கூறவில்லை.
இந்நிலையில் அவரை பலாத்காரம் செய்த சிறுவர்களில் ஒருவர் அந்த வீடியோவை வாட்ஸ்அப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பினார். அந்த வீடியோ பல இடம் சென்று கடைசியில் சிறுமியின் அத்தை போனுக்கே வந்துள்ளது.
இந்நிலையில் அவரை பலாத்காரம் செய்த சிறுவர்களில் ஒருவர் அந்த வீடியோவை வாட்ஸ்அப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பினார். அந்த வீடியோ பல இடம் சென்று கடைசியில் சிறுமியின் அத்தை போனுக்கே வந்துள்ளது.
வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியை அழைத்து விசாரித்தபோது தான் அவர் உண்மையை தெரிவித்தார். அதன் பிறகு அந்த 4 சிறுவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் அந்த 4 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்படி அவர்கள் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அந்த 4 சிறுவர்களும் 15 முதல் 16 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.