கேரளாவைச் சேர்ந்த பிரபல வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளை, தனது மகள் திருமணத்திற்காக, மிக பிரமாண்டமாக அமைத்துள்ள திருமண அரங்க செட்டிங், இந்தி சினிமா செட்டுகளை மிஞ்சி விட்டது.
ஆர்பி குழுமம் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் ரவி பிள்ளை, வெளிநாடு வாழ் கேரள தொழிலதிபர்களில் ரூ18 ஆயிரம் கோடி வருவாயுடன் முதலிடத்தில் உள்ளார்.
தனது டாக்டர் மகள் ஆர்த்திக்கும், டாக்டர் ஆதித்ய விஷ்ணுவுக்கும் நேற்று நடைபெற்ற திருமணத்தில் இடம் பெற்ற சுவாரசியமான சாராம்சங்கள்:
* திருமண பட்ஜெட் ரூ55 கோடியாம்.
* ரூ20 கோடியில், 8 ஏக்கரில் திருமண அரங்கம் ஜொலித்தது.
* பாகுபலி கலை இயக்குனர் சாபு சிரில் தலைமையில்ராஜஸ்தான் அரண்மனை பாணியில் பந்தல் அமைக்கப்பட்டது.
* 3,50,000 சதுர அடியில் கண்ணைப் பறிக்கும் லேசர் ஒளியுடன் பந்தல் அலங்காரம்.
* பாடகர் ஸ்டீபன் டேவஸ்ஸி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி.
* 42 நாடுகளைச் சேர்ந்த விஐபிக்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தூதர்கள் கலந்து கொண்டனர்.
* மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பஹ்ரைன் அரச குடும்பத்தினர் ஆகியோர் சிறப்பு விமானத்தில் வந்தனர்.
* திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் விருந்தினர்கள் ஓய்வு எடுக்கவும், திருமண அரங்கத்திற்கு வந்து செல்ல ரூ10 கோடி ஒதுக்கீடு.
* பிரபல பரத நாட்டியக் கலைஞர் சோபனா மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியாரின் குச்சுப்புடி நடனம் காண்போர் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.
* விருந்தினர்கள் பாதுகாப்பிற்கு, 250 கேரள போலீசார், 350 தனியார் செக்யூரிட்டிகள் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
* திருமண செட்டிங்கை பிரித்து எடுக்க இரண்டு வாரங்களுக்கும் மேலாகுமாம்.