600 ஊழியர்கள் பணி நீக்கம்.. ஹவுசிங்.காம் திடீர் முடிவு!

இந்தியாவில் ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமா கத் திகழும் ஹவுசிங்.காம் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் யாதவ் இந்நிறு வனத்தை விட்டு வெளியேற்றிய பின், இந்நிறுவனம் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
 
தற்போது, ஹவுசிங்.காம் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் சேவையை மேம்படுத்தவும், செலவீனத்தைக் குறைக்கவும் 600 பணியாளர்களை அடுத்த 3 மாதத்தில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக இந்நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத சில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மறுசீரமைப்பு பணிகளை ராகுல் யாதவ் ஹவுசிங்.காம் நிறுவனத்தில் இருக்கும்போதே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில பணியாளர்களை நிறுவனத்தை விட்ட வெளியேற நிர்வாகம் கேட்டதாகவும், சில பணியாளர்களைத் திறனற்றவர்கள் எனவும் கூறி வெளியேற்றி வருவதாக ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிறுவனத்தில் சில முக்கியச் சேவைகள் முடக்கப்படுவதால் இப்பிரிவில் உள்ள 160 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஹவுசிங்.காம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 3 வயதான இந்நிறுவனத்தில் சுமார் 2,600 பணியாற்றி வருகிறது.

இந்நிறுவனத்தில் வெளியேற்றப்பட்ட முன்னாள் சீஇஓ மற்றும் நீர்வாக இயக்குநர் ராகுல் யாதவ், வெளியேற்றப்பட்ட அடுத்த 30 நாட்களுக்குள் புதிய ஐடிவுடன் 10 மடங்கு பெரியதாக வருகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
Tags:
Privacy and cookie settings