பிஹாரில் ரயில் பெட்டியில் 7 வெடிகுண்டுகள் சிக்கின !

பிஹாரில் பயணிகள் ரயில் பெட்டியில் 7 வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பிஹாரில் மால்டா கட்டிஹார் இடையே பாசஞ்சர் ரயில் இயங்கி வருகிறது.

 

இந்த ரயிலில் வெடிகுண்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு ரயில்வே போலீஸார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். இந்நிலையில் பொதுப் பெட்டியில் ஒரு இருக்கைக்கு அடியில் இருந்த, எவரும் உரிமை கோராத ஒரு பெட்டியில் இருந்து 7 வெடிகுண்டுகளை கைப்பற்றினர். 

வெடிக்கும் வகையில் முழுமை அடையாத இந்த வெடிகுண்டுகளை கொள்ளையர்கள் கொண்டு வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் பின்னர் இந்த குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
Tags:
Privacy and cookie settings