பிரசார் பாரதி நிர்வாகக் குழுவின் பகுதிநேர இயக்குநர்கள் பதவிக்கு பாலிவுட் நடிகை கஜோல் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் பரீசிலிக்கப்படுகின்றன. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,
பிரஸார் பாரதி நிர்வாகக் குழுவின் பகுதி நேர இயக்குநர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்படவுள்ள ஏழு பேர்களின் பெயர் கொண்ட புதிய பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது.
இந்தப் பட்டியலில் நடிகை கஜோல், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 'ஆர்கனைஸர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்ரி சாரி, நடிகர் விக்ரம் கோகலே, கல்வியாளர் வர்திகா நந்தா, திரைக்கதை ஆசிரியர் பிரகாஷ் கபாடியா உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறைச் செயலர் பிமல் ஜுல்கா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு, இந்தப் பட்டியலில் இருந்து 6 பகுதி நேர இயக்குநர்களைத் தேர்வு செய்யப் போகிறது.
எப்படியும் கஜோலுக்கு பதவி நிச்சயம்!