‘ஐஸ்கிரீம்’ தேடும் அமெரிக்கர்களின் மனசு | Americans looking for the heart of the ice cream !

அமெரிக்காவில் ஜூலை மாதம் முழுவதுமே ஐஸ்கிரீம் மாதமாகக் கொண்டா டுகிறார்கள் மக்கள். 


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ரொனால்டு ரீகன் ஒரு ஐஸ்கிரீம் பிரியராம்.

அதனால், ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் மூன்றாவது ஞாயிறை ஐஸ்கிரீம் நாளாக கொண்டாட ஐடியா செய்தார்.

ஆனால், கோடைகாலமான ஜூலையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில்,

ஜூலை மாதத்தின் அனைத்து நாட்களையுமே ஐஸ்கிரீம் நாளாகக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் அமெரிக்கர்கள்.

தொட்டதிற்கெல்லாம் ஐஸ்கிரீம் ட்ரீட் கொடுத்து மகிழும் மனிதர்களுக்காக இதோ ஐஸ்கிரீம் பற்றி ஒரு சில சுவையான தகவல்கள்...

பெயர் உருவான வரலாறு... 

1776ம் ஆண்டு, ஐஸ்கிரீம் என்ற சொல் ‘ஐஸ்டு கிரீம்' என்னும் சொற்களி லிருந்து உருவாக்கப்ப ட்டது.

நீரோ மன்னனின் ஐஸ்கிரீம்... 

4ம் நூற்றாண் டில் இருந்தே ஐஸ்கிரீம் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்துள் ளதாக வரலாற்று ஆய் வாளர்கள் தெரிவிக் கிறார்கள். 

ரோமாபுரி மன்னனான நீரோ, தன்னை சந்திக்க வரும்  சிறப்பு விருந்தினர் களை மகிழ்விக்க,

பணி யாட்களை அனுப்பி மலை உச்சியி லிருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து வரச் செய்து, பழங்களுடன் சேர்த்து கூழாக்கி பரிமாறு வாராம்.

ஐஸ்கிரீம் வரவேற்பு... 

எல்லீஸ் தீவிற்கு வருகை தரும் விருந்தாளி களுக்கு, முதலில் ஐஸ்கிரீம் கொடுத்து வரவேற்பது அத்தீவு மக்களின் பாரம்பரிய வழக்க மாகும்.


ஐஸ்கிரீம் பிரியர்கள்... 

உலக அளவில் அதிக ஐஸ்கிரீம் பிரியர்கள் வாழ்வது அமெரிக்காவில் தானாம்.

சராசரியாக ஒரு அமெரிக்கர் 2 நாட்களில் 5 ஹாலன் ஐஸ்கிரீம் களை சுவைப்பதாக கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது.

குட்டீஸ் சாய்ஸ்.... 

குழந்தை களின் ஆல்டைம் பேவரை ஐஸ்கிரீம் தான். அதற்கு அடுத்த படியாக குழந்தை களின் விருப்பப் பண்டமாக இருப்பது குக்கீஸ்கள்.


தயாரிப்பில் முதலிடம்... 

ஐஸ்கிரீம் தயாரிப்பில் முதலிடத்தில் இருப்பது கலிபோர்னியா மாகாணம்.

தூள் பறக்கும் விற்பனை... 

ஓரிகான், மேரிலேண்ட், ஒமாகா போன்ற இடங்கள் ஐஸ்கிரீம் விற்பனையில் தூள் கிளப்பும் பகுதிகள் ஆகும்.

வருமானம் தருகிறது... 

ஐஸ்கிரீம் வருமானத்தில் மட்டும் அமெரிக்காவுக்கு 90 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது.

ஏற்றுமதி.... 

ஜப்பான், மெக்சிகோ, கொரியா நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து அதிகளவில் ஐஸ்கிரீம் ஏற்றுமதி ஆகிறது.


கோனை கண்டுபிடித்தவர்... 

1904ம் ஆண்டு தான் முதன் முதலில் ஐஸ்கிரீம் கோன் கண்டு பிடிக்கப் பட்டது.

இதனைக் கண்டு பிடித்த லூயிஸ் என்ற அமெரிக்கர், தற்செயலாக கண்டுபிடித் தது தான் இந்த ‘ஐஸ்கிரீம் கோன்'.

பெரிய ‘கோன்’.... 

உலகிலேயே மிக உயரமான ஐஸ்கிரீம் கோன் 13 அடி உயரத்தில் அமெரிக்கா வில் உருவாக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings