ஆண்ட்ராய்டு போனின் வேகத்தை அதிகரிக்க!

வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் கிடையாது, அப்புறம் மின்சாதன கருவிகள் மட்டும் விதி விலக்கா என்ன..?

 பிரச்சனை

பொதுவாக மின்சாதன கருவிகளை கணிக்கவே முடியாது. எவ்வளவு தரமான கருவியானாலும் நொடியில் ஏதேனும் பிரச்சனை வந்து விடும். 

அப்படியாக இன்று உலகமே ஆண்ட்ராய்டில் மூழ்கி இருக்க, பெரும்பாலான ஆண்ட்ராய்டு கருவிகள் சில மாதங்களில் வேகம் குறைந்து விடுவதாக குற்றச்சாட்டு இருக்கின்ற நிலையில், 

உங்களது கருவியும் ஆமை வேகத்தில் இயங்குகின்றதா, அதனினை முயல் வேகத்தில் இயங்க வைக்க சில 'தரமான' டிப்ஸ்...

பிரச்சனை 

உங்களது போன் வேகமாக இயங்காத போது அதிகப்படியான செயலிகள் இயங்குகின்றதா, என்பதை முதலில் கவனிக்க வேண்டும்..!

ஸ்பேஸ்

ஸ்பேஸ் 

போனில் ஸ்பேஸ் அதிகமாக இருந்தால் வேகம் குறைய ஆரம்பிக்கும். மெமரியை முடிந்த வரை குறைப்பது போனின் வேகத்தை அதிகரிக்கும்.

விட்ஜெட் 

ஹோம் ஸ்கிரீனில் இயங்கும் விட்ஜெட்கள் போனின் வேகத்தை குறைக்க முக்கிய காரணமாக இருக்கின்றது. முடிந்த வரை முக்கியமில்லாத விட்ஜெட்களை டிசேபிள் செய்வது நல்லது.

அனிமேஷன் 

அனிமேஷன் வால்பேப்பர்கள் போன் இயங்கும் வேகத்தை குறைக்கும். இவைகளை டிசேபிள் செய்து போனின் வேகத்தை அதிகரிக்க முடியும்.

அனிமேஷன்

ஆப்ஸ் 

மல்டி டாஸ்கிங் செய்வதால் பெரும்பாலும் போன் ஆமை வேகத்தில் தான் இயங்கும், முடிந்த வரை பல செயலிகளை ஒரே சமயத்தில் இயக்குவதை தவிர்த்திடுங்கள்.

ரீஸ்டார்ட் 

போனின் வேகம் திடீரென குறைந்தால் அதனினை ரீஸ்டார்ட் செய்து மீண்டும் முயற்சிக்கலாம்.
பேட்டரி
பேட்டரி 

போனில் எந்த செயலி அதிக ரேம் பயன்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொள்ள செட்டிங்ஸ் -- ஆப்ஸ் பகுதியில் சென்று அறிந்து கொள்ள முடியும்.
Tags:
Privacy and cookie settings