சரியான அளவு தண்ணீர் குடிப்பதை நினைவூட்ட ‘Water Your Body’ எனும் ஒரு செயலி உருவாக்கப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இது நீங்கள் எப்போ தெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூ ட்டுகிறது.
முதலில் இந்தச் செயலியில் உங்கள் உடல் எடையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உங்களுக்குத் தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக் கொள்கிறது.
தண்ணீர் குடிக்கப் பயன்படும் கிளாசின் அளவு, நாள் முழுவதும் நினைவூட்ட வேண்டுமா போன்ற விவரங்களைத் தெரிவித்து நமக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
காலையில் 8 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்றால், அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்தச் செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும்.
காலையில் 8 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்றால், அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்தச் செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும்.