அமெரிக்காவைச்வைச் சேர்ந்த பெண்ணொருவர் 8 அடி சுற்றளவு கொண்ட பாரிய வயிற்றுடன் காணப்படுகிறார். 52 வயதான கெய்லா நிவ்பெல்ட் எனும் இப்பெண் தனது வயிற்றை "வெப்கெம்" கெமரா மூலம் காண்பிப்பதையே தனது தொழிலாகக் கொண்டுள்ளார்.
பருமனானவர்களை விரும்பும் ஆண்கள் இவரின் 96 அங்குல வயிற்றை வேடிக்கை பார்ப்பதற்காக பணம் வழங்குகின்றனராம்.
தனது தற்போதைய கணவர் லான்ஸுடன் இணைந்து இத்தொழிலை ஆரம்பித்ததாக கெய்லா கூறுகிறார். இவர் 190 கிலோகிராம் எடையைக் கொண்டிருக்கிறார். நான் வளரும்போது எனது பருமனான வயிறு குறித்து பெரும் கவலையடைந்தேன்.
ஆனால், இவ்வயிற்றை விரும்பும் பெரும் எண்ணிக்கையான ஆண்கள் உள்ளனர். இதனால் எனக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். நான் இப்போது ஒரு சர்வதேச வெப்கெம் மொடல்.
மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பொடி பில்டர்கள் ஆகியோரும் எனது வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்கிறார் கெய்லா.