மாணவிகளை நிர்வாண கோலத்தில் பயமுறுத்திய ஸ்பைடர்மேன் !

ஸ்பைடர்மேன் பாணியில் முகமூடி அணிந்துகொண்டு உடலில் வேறு எந்த ஆடையும் அணியாமல் பூங்காவொன்றில் திரிந்து பதின்மர் வயதான மாணவிகளை அச்சுறுத்திய இளைஞன் ஒருவனை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


27 வயதான வின்சன்ட் லாம் எனும் இந்த இளைஞன் முழுமையாக ஆடையணிந்திருந்த நிலையில் பொலிஸாரால் பின்னர் கைது செய்யப்பட்டான்.

ஆனால், அவனின் பொக்கெற்றுக்குள் ஸ்பைடர்மேன் மூகமூடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பேர்மிங்ஹாம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி இளைஞனுக்கு 100 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் அபராதம் விதித்த நீதிவான், வழக்கு செலவு தொடழர்பாக மேலும் 280 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களை செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன் பாலியல் குற்றம்புரிந்தவர்களின் பட்டியலிலும் அவனின் பெயரை சேர்க்குமாறு உத்தரவிட்டார்
Tags:
Privacy and cookie settings