நியூ சீலந்தின் தேசியக் கொடியை மாற்றுவதற்கு நியூசீலந்து அரசு முடிவெடுத் துள்ள நிலையில் கொடித் தேர்வுக் குழு இதற்கென வடிவமைத்து அனுப்பி வைக்கப் பட்ட 10292 கொடிகளின் வடிவமைப் புக்களை பரிசீலித்து 40 வடிவங் களைத் தெரிவு செய்துள்ளது. நான்கு வடிவங்கள் தெரிவு செய்யப்பட்டு சர்வஜன வாக்கெடுப் பிற்கு விடப்படும்.
1834 இலிருந்து இதன் வரலாறு தொடங்குகிறது. பிரித்தானியக் காலனித்துவம் தொடங்கிய வேளையில் அவர்கள் வந்த கப்பல்களில் இணைக்கப்பட்டிருந்த கொடிகளின் வடிவமும் உள்வாங்கப்பெற்று 1902இல் தற்போதுள்ள கோடி உருவானது. தற்போதைய கொடி உருவானது .
1834 இலிருந்து இதன் வரலாறு தொடங்குகிறது. பிரித்தானியக் காலனித்துவம் தொடங்கிய வேளையில் அவர்கள் வந்த கப்பல்களில் இணைக்கப்பட்டிருந்த கொடிகளின் வடிவமும் உள்வாங்கப்பெற்று 1902இல் தற்போதுள்ள கோடி உருவானது. தற்போதைய கொடி உருவானது .
பல தசாப்தங்களாக இந்நாட்டின் கொடியை மாற்றுவதென விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக வானொலிகளில் விவாதங்களும் மக்கள் கருத்துக்களும் இடம்பெற்றன. .
பிரதமர் ஜோன் கீ யின் அரசாங்கம் இது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பை நடத்த உத்தேசித்துள்ளது. நியூசீலந்தின் தேசியக் கொடி அதன் அரசியல் சமூக வரலாற்றுடன் பிணைந்தது .
இந்த நாட்டின் ஆரம்பக் குடியேற்ற வாசிகளாக இருந்த மவுரி மக்களுக்கும் பின்னர் 1833 இல் குடியேறிய பிரித்தனியர்களுக்குமிடையில் ஏற்பட்ட சந்திப்புகள் உடன்படிக்கையாக நிறைவேறிற்று (வைட்டாங்கி உடன்படிக்கை (வைட்டாங்கி என்ற இடத்தில பிரிட்டிஷாருக்கும் மவுரி தலைவர்களுக்குமிடையில் ஏற்பட்டது.
இப்போது உள்ள கொடி இந்த நாட்டிற்கு வந்த பிரித்தானியரின் கப்பல்களில் கட்டப்பட்டிருந்த கொடியின் அமைப்பிலிருந்து உள்வாங்கப்பட்ட வடிவம் எனப்படும். இதனை மாற்றி புதிய கொடி ஒன்றை அமைப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நியூசீலந்தின் அரச கரும மொழிகளாக ஆங்கிலம் ,மவுரி , சைகை மொழி ( மாற்றுத் திறனாளிகளுக்காக) என்பன உள்ளன. பொதுவாக ஆங்கிலத்திலேயே நிருவாகக் கடமைகள் ஆற்றப்படினும் மவுரி மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேசிய கீதம் மவுரியிலும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் எங்கும் எதிலும் பாடப்படுபவதே வழக்கமாகும் .இங்கு சுமார் 30 க்குமேற்பட்ட மொழிகள் பேசுவோர் வசிக்கின்றனர். பொதுவாக எல்லோரும் குடியேறியவர்களே.
இவர்கள் தங்கள் அரச கரும வேலைகளைப் பேணி அரச நிருவாகத்துடன் விரும்பிய நேரத்தில் தொடர்புகொள்ளத்தக்க வகையில் Language Line ,Citizens Advice Bureau போன்ற அமைப்புகள் பணிபுரிகின்றன.
அதேவேளை குடிவரவுத் திணைக்களம் , வருமானவரித் திணைக்களம் போன்றன பிரசைகளின் தனிப்பட்ட இரகசியங்களைப் பேணும் வகையில் தமக்கென மொழிபெயர்பாளர்களை ஏற்பாடு செய்து கொண்டுள்ளன.
உதாரணமாக இங்கு வசிக்கும் ஒருவர் குடிவரவுத் திணைக்களத்திற்கு தொடர்பு கொண்டு தமது மொழியைச் சொன்னால் சில நிமிடங்களில் – மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் ஊடாக திணைக்கள உத்தியோகத்தர் அவரைத் தொடர்பு கொள்வார்.
ஐ நா அகதிகள் தூதராலய உதவியுடன் அகதிகாளாக வந்து வசிப்பவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர் வசதிகளை குடிவரவுத் திணைக்களமும் இவர்களின் நலனைப் பேணும் செஞ்சிலுவைச் சங்கமும் உடனுக்குடன் உரியமுறையில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்களது மீள் குடியேற்ற செயற்பாடுகளுக்கு சுமார் ஒரு வருட காலம் வரை இந்த மொழி பெயர்ப்பாளர் Cross Cultural worker உதவி வழங்கப்படுகிறது. இவர்கள் Language Line ,Citizens Advice Bureau போன்றவற்றின் உதவியையும் நாடமுடியும்.
அகதிகளாக வரும் குடும்பங்களின் சிறார்களுக்கு அவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் அவர்கள் எங்கு கற்றாலும் ஆங்கிலமொழித திறனுக்காக விசேட கல்வி உதவியாளர் வசதிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகதிகளாக வருபவர்களுக்கு அவர்களின் குடும்ப அங்கத்தவர் சகலருக்கும் – அகதிகள் சேவை நிலையத்தில் ஆறுவாரம் தொடர்ந்து ஆங்கிலமொழிப் பயிற்சியை அவர்களின் தரத்திற்கு ஏற்ப வழங்கும் ஒரேயொரு நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது