நான் உன்னுடைய இடத்தில் இருந்தால், திரும்பி வர மாட்டேன் !

பாகிஸ்தானில் சிக்கியிருக்கும் கீதாவிடம் நான் உன்னுடைய இடத்தில் இருந்தால், இந்தியாவிற்கு திரும்ப விரும்ப மாட்டேன் என்று இந்தி நடிகர் சல்மான் கான் கூறிஉள்ளார்.
நான் உன்னுடைய இடத்தில் இருந்தால், திரும்பி வர மாட்டேன் !
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பஜ்ரங்கி பைஜான்’ இந்தி படத்தின் கதையை போன்றே, பாகிஸ்தானில் இந்திய பெண் ஒருவர் தவிக்கிறார். 

பஜ்ரங்கி பைஜான்  இந்திபடம் பாகிஸ்தானிலும் வசூலை கொட்டியது. 14 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில், 

இந்தியாவில் இருந்து வந்த ரெயிலின் ஒரு பெட்டியில் சிறுமி ஒருத்தி அனாதையாக அழுதபடி நின்று கொண்டிருந்தாள். அந்த சிறுமிக்கு அப்போது 9 வயது இருக்கும்.

மாற்றுத் திறனாளியான அந்த சிறுமியால் பேச முடியாது. காது கேட்கும் திறனையும் இழந்தவள். இதனால் அவளால் தனது பெற்றோர் பற்றியோ, தனது சொந்த ஊர் பற்றியோ எதுவும் தெரிவிக்க முடிய வில்லை.

சிறுமி கராச்சியில் உள்ள மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவளது பெயர் என்ன என்று தெரியாததால், அறக்கட்டளை நிர்வாகிகள் அவளுக்கு கீதா என்று பெயர் கூட்டினார்கள்.

கீதாவுக்கு தற்போது 23 வயது ஆகிறது. இந்தியாவில் உள்ள கீதாவின் பெற்றோரை கண்டுபிடித்து அவரை, அவர்களிடம் ஒப்படைக்க அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
கீதாவிடம் இந்திய வரைபடத்தை காட்டி, உனது ஊர் எது? என்று கேட்டால் ஜார்கண்ட், தெலுங்கானா மாநிலங்களை விரல் வைத்து காட்டுவதாகவும் 

மேற்கொண்டு எதையும் வெளிப்படுத்த தெரியாமல் சோகத்தில் கண்ணீர் விட்டு அழுவதாகவும் அறக்கட்டளையின் நிர்வாகி பைசல் தெரிவித்தார். 

இந்தியப் பெண் கீதாவை இங்கு அழைத்துவர இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பாகிஸ்தானில் சிக்கியிருக்கும் கீதாவிடம் நான் உன்னுடைய இடத்தில் இருந்தால், இந்தியாவிற்கு திரும்ப விரும்பமாட்டேன் என்று இந்தி நடிகர் சல்மான் கான் கூறிஉள்ளார்.

ஆங்கில செய்திசேனல் என்.டி.டி.வி. ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மூலம் கீதாவிடம் இந்தி நடிகர் சல்மான்கான் பேசினார். 

இவ்வளவு நாட்களாக கீதாவை பார்த்துக் கொள்ளும் பில்குய்ஸ் பிபிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கீதா நாடு திரும்பினால், அவர் தனது பெற்றோர்களிடம் இருந்து பெறும் அதே அன்பை காட்டிய அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறிஉள்ளார்.

சல்மான்கானிடம் பேசிய கீதா பாகிஸ்தானில் எனுக்கு ஒன்றும் கிடையாது, இந்தியாவிற்கு திரும்பி வர விரும்புகிறேன், என்னுடைய தாயை நான் அதிக நாட்கள் பிரிந்து விட்டேன். என்று கூறினார்.

கீதாவிடம் பேசிய சல்மான் கான், உன்னை பாகிஸ்தானில் நன்றாக பார்த்துக் கொள்கின்றனர், பிறகு ஏன் மகிழ்ச்சியற்று இருக்கிறாய் என்று கேட்டு உள்ளார். 
மறாக என்னை இந்தியாவிற்கு விமானம் அழைத்து செல்லப்பட வில்லை என்றால், என்னை உங்களுடைய தோளில் வைத்து எங்களது வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்டுக் கொள்வேன் என்று கூறினார்.

பாகிஸ்தானில் இருக்கும் கீதா ரமலான் நோம்பு இருக்கிறார். அங்கு இந்து கடவுளையும் வழிபாடு செய்கிறார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. கீதாவின் பெற்றோர் இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை.

கீதாவிடம் உங்களுடைய அம்மாவை கண்டுபிடித்து வீட்டீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது கீதா அழுது விட்டார். 

இருப்பினும் கீதா என்னுடைய பெற்றோர்களால் வேண்டும் என்றால் என்னை அடையாளம் காண முடியாது, ஆனால் என்னை அவர்களை அடையாளம் காண முடியும் என்று உறுதியாக கூறி உள்ளார்.

கீதாவுடைய திருமணத்திற்கான பணம், மற்றும் அவர் இந்தியாவில் அவருடைய பெற்றோர்களை கண்டுபிடித்து, அவர்களுடன் இணையும் வரையில் அனைத்து பொறுப்புகளையும், ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ள சல்மான்கான் 

இது வரையில் கீதாவை மகள் போல் பார்த்துக் கொண்டவர்களுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார். கீதா அவருடைய பெற்றோர்களை கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, 

ஆனால் இவ்வளவு நாட்களாக அவரை நல்லபடியாக பார்த்துக் கொண்ட உங்களுடைய பணியானது மிகவும் சிறந்தது, என்று பிபிக்கு தனது பாராட்டை தெரிவித்து உள்ளார்.
நான் கீதாவின் இடத்தில் இருந்தால், நான் திரும்பிவர மாட்டேன், என்று நடிகர் சல்மான் கான் கூறி உள்ளார். 

ஆனால் கீதா என்னுடைய பெற்றோர்களை கண்டுபிடித்தாலோ அல்லது கண்டுபிடிக்க வில்லை என்றாலோ என்னுடைய தயாகத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக கூறிஉள்ளார்.

நிகழ்ச்சியில் உரையாடிய சல்மான்கானின் உணர்வுப் பூர்வமான நடவடிக்கையை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings