ஆர்யா, அனுஷ்கா நடித்திருக்கும் 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம் தெலுங்கில் 'யு/ஏ' சான்றிதழுடனும், தமிழில் 'யு' சான்றிதழுடனும் வெளியாக இருக்கிறது.
ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு கீரவாணி இசையமைத் திருக்கிறார்.
பி.வி.பி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் நாளை (நவம்பர் 27) வெளியாக இருக்கிறது. இப்படம் இரண்டு சென்சார் சான்றிதழ்களுடன் வெளியாக இருக்கிறது.
தெலுங்கில் இப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வாங்கி யிருக்கிறார்கள். 'யு/ஏ' சான்றிதழ் இருந்தால் வரிச்சலுகை கிடையாது என்ற சட்டம் ஆந்திராவில் கிடையாது என்பதால் இது குறித்து படக்குழு கவலைப்பட வில்லை.
அதே வேளையில், தமிழில் இப்படத்தை சென்சார் செய்த போது இங்கும் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள்.
ஆனால் 'யு/ஏ' சான்றிதழ் என்றால் வரிச்சலுகை கிடைக்காது என்பதால் படத்தில் உள்ள முத்தக் காட்சியைக் குறைத்து 'யு' சான்றிதழ் வாங்கி யிருக்கிறார்கள்.
இப்படத்தில் நாகார்ஜூன், ஜீவா, பாபி சிம்ஹா, ராணா, ஹன்சிகா, தமன்னா, ஸ்ரீதிவ்யா, ரேவதி, காஜல் அகர்வால், உள்ளிட்ட நட்சத்திரங்கள் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
உடல் அமைப்பிலோ, தோற்றப் பொலிவிலோ இருப்பது அழகு அல்ல; நல்ல எண்ணம் தான் உண்மையான அழகு என்பது தான் இப்படத்தின் மையக் கருவாகும்.
அழகாக இருப்பதற்கு இயற்கையான முறைகளே போதும், செயற்கையான முறைகள் வேண்டாம் என்றும் இப்படத்தின் மூலமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அழகாக இருப்பதற்கு இயற்கையான முறைகளே போதும், செயற்கையான முறைகள் வேண்டாம் என்றும் இப்படத்தின் மூலமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.
Tags: