தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த வெங்கட்பிரபு !

முன்னணி இயக்குநர் வெங்கட்பிரபு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'சென்னை 28', 'சரோஜா', 'கோவா', 'மங்காத்தா', 'பிரியாணி', 'மாஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் வெங்கட்பிரபு. இயக்குநர் மட்டுமன்றி பல படங்களில் நடித்திருக்கிறார். 
 இயக்குநர் வெங்கட்பிரபு | கோப்பு படம்
தற்போது புதிதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு 'ப்ளாக் டிக்கெட் கம்பெனி' என்று பெயரிட்டு இருக்கிறார். தனது பிறந்தநாளன்று ட்விட்டர் தளத்தில் இதனை அறிவித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

தனது முதல் படத்தை இயக்குநர் கெளதம் மேனனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. 

"சென்னை 28 படத்தில் நடித்தவர்களை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், அப்படம் 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது" என்று வெங்கட்பிரபுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். 
Tags:
Privacy and cookie settings