புதுமுக இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் ஜீவா நடிக்கவிருக்கும் 'ஜெமினி கணேசன்' படத்தின் நாயகியாக லட்சுமி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
'திருநாள்', 'போக்கிரி ராஜா' ஆகிய படங்களைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜீவா. இப்படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்குநரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முத்துக்குமார் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தின் கதை களத்துக்கு 'ஜெமினி கணேசன்' என்று தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்கள். உடனே மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினரிடம் அனுமதிக் கோர, அவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் ஜீவாவுக்கு நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அப்பேச்சுவார்த்தையில் லட்சுமி மேனனுக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, இப்படத்தில் நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
விரைவில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.