அரை ஆண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை பள்ளிக் கல்வித்துறை !

தமிழகத்தில் அரை ஆண்டு தேர்வு அட்டவணையில் இப்போதைக்கு மாற்றம் இல்லை என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வி இயக்குனரகம் கடந்த நவம்பர் மாதம் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரை ஆண்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. 

 

அதன்படி, பிளஸ் 2 தேர்வு டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி முடிவடையும் என்றும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மழையால் தொடர் விடுமுறை: இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது.

இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. தள்ளி வைக்கப்பட எதிர்பார்ப்பு: இதன் காரணமாக அரை ஆண்டு தேர்வு ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேதியில் இருந்து தள்ளி வைக்கப்படலாம் என மாணவ-மாணவிகளிடையே எதிர்பார்ப்பு இருந்தது. இப்போதைக்கு மாற்றம் இல்லை: 

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது அவர், "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தான் கனமழை பெய்துள்ளது.

எனவே, இப்போதைக்கு அரை ஆண்டு தேர்வு கால அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி தேர்வு நடைபெறும்.

மழைக்குப் பின்னர் முடிவு: 

ஆனால், இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, இந்த 3 நாட்களுக்கு பிறகு அரை ஆண்டு தேர்வு நடைபெறும் அட்டவணையில் மாற்றம் உண்டா? இல்லையா? என்பது தெரிய வரும்" எனத் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings