முடியலம்மா.. விசம் மட்டும் வாங்கிக் கொடும்மா.. கொடூரம் !

ரஷீதா என்ற இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், நாம் மனித சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்புகிறது.
 
திருச்சியைச் சேர்ந்த ரஷீதா, பதினோரு வருடங்களுக்கு முன் அரக்கோணத் தைச் சேர்ந்த அக்கி பாட்ஷா என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட் டாள். அப்போது ரஷீதாவுக்கு வயது பத்தொன்பது.

பிழைப்புக்காக கணவர் அக்கிபாட்ஷா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தி ருப்பூர் வந்தார் ரஷீதா. திருமணம் ஆனதிலிருந்தே கணவர் வீட்டாரால் வரத ட்சணை கேட்டு ரஷீதா கொடுமைப்படுத்தப்பட்டார்.

அதீத வேலை, ஆனால் சாப்பாடு கிடையாது. இதற்கிடையே மது அருந்தி விட் டு வந்து அடித்து உதைக்கும் கணவன். அத்தனை கொடுமைகளையும் பொறுத் துக்கொண்டு வாழ்ந்த ரஷீதா, மூன்று பெண் குழந்தைகளக்கு தாயானாள்.

முதல் இரு பெண் குழந்தைகள் பிறந்தபோதே, “அடுத்ததும் பெண் குழந்தை பிறந்தா, உன்னை வீட்டை விட்டு விரட்டிடுவோம்” என்று எச்சரித்திருக்கிறான் கணவன் அக்கிபாட்ஷா. அதற்கு அவனது குடும்பமும் ஆமாம் போட்டிருக்கி றது.

அடுத்ததும் பெண்ணாக பிறக்க.. கணவரின் குடும்பத்தார் சேர்ந்து அடித்து உதைத்து விரட்டிவிட்டார்கள். குறிப்பாக, நடக்க முடியாதபடி காலில் அதிக அடி.

எங்கே செல்வது என்று தெரியாத ரஷீதா, மெல்ல மெல்ல நகர்ந்து, திருப்பூர் வீரபாண்டி பிரிவு பேருந்து நிலயத்துக்கு வந்து சேர்ந்தாள். போக்கிடம் தெரிய மால், அங்கேயே ஒரு மூலையில் சுருண்டு படுத்தாள். இது நடந்தது ஆறு மாதங்களுக்கு முன்…

 tiruppur-koduram

அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் இன்னும் அதிகம்! கால் வீங்கி நடக்க முடியாமல் போய்விட்டது. நடக்க என்பதைவிட நகரக்கூட முடியாத நிலை.. அந்தப் பக்கம் வருவோரில் பரிதாபப்பட்டு யாராவது ஏதாவது வாங்கிக் கொடுத்தால் உண்டு. மற்றபடி பட்டினிதான்.

இதனால் ரஷீதாவின் உடல் மிகவும் பலவீனமானது. தலை முழுதும் சிரங்கு. உடலெங்கும் துர்நாற்றம். உயிர் மட்டும் மிச்சமிருக்கும் பிணம்போல் ஆனாள் ரஷீதா.

ஆனால் அந்த நிலையிலும் அவளை பாலியல் ரீதியாக பயன்படுத்தத் துவங்கி னார்கள் கொடூர மனம் படைத்த சிலர். மதுவாடையோடு, தன் மேல் படரும் அந்த மூர்க்கர்களை எதிர்கொள்ள வலு இல்லாமல் கிடப்பாள் ரஷீதா.கடந்த ஆறு மாதங்களாக இப்படி ஓர் கொடூர வாழ்வு அவளுக்கு.

இதைவிட இன்னும் ஒரு கொடுமை.. இடையே, ரஷீதாவின் தாயும் தம்பியும் இருமுறை வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், தங்களுடன் அழைத்துச் செல்லவோ, ரஷீதாவுக்கு சிகிச்சை அளிக்கவோ முயலவில்லை.

“என்னால முடியலம்மா.. நடக்க தெம்பு இருந்தா விசம் வாங்கி குடிச்சி செத்து டுவேன்.. அதுக்கும் வழியில்ல.. தயவு செஞ்சு விசம் வாங்கிக்கொடும்மா” என் று தாயிடம் கெஞ்சியிருக்கிறாள் ரஷீதா. இது பற்றி ரஷீதா சொல்வதைக் கேட் டால் கல்லும் கரையும்:

“எங்கம்மா விசம் வாங்கிட்டு வரும்னு ஆசை ஆசையா இருந்தேன்.. ஆனா அடுத்த முறை வந்தப்பவும் ஒரு பிஸ்கட் பாக்கெட் மட்டும் வாங்கிக் கொடுத்து ட்டு போயிடுச்சி.”

 tiruppur-koduram1

ரஷீதாவின் அவல நிலை, திருப்பூர் அனுப்பர் பாளையத்தைச் சேர்ந்த சமூக சே வகர் தெய்வராஜூக்குத் தெரியவந்தது. அதன் பிறகு நடந்ததை தெய்வராஜே கூறுகிறார்:

“அந்த பெண்மணியை பார்க்கும்போதே மனசு கலங்கிடுச்சி. அரைகுறையா உ டம்புல துணி சுத்தப்பட்டு இருந்தது.. தலை, உடம்புன்னு பல இடங்கள்ல சிரங் கு.. பசி மயக்கத்துல இருந்தாங்க..

லெமன் ஜூஸ் கொடுத்து கொஞ்சம் தெம்பாக்கினோம். தலையெல்லாம் சிக் கா, சிரங்கு இருந்ததால மொட்டை அடிச்சோம். அப்புறம் சுத்தப்படுத்தி, மாற்று த்துணி கொடுத்து சாப்பிட வைச்சோம். பிறகு தான் தெளிவாக பேச ஆரம்பித் து, தனக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சாங்க..”

ஆறு மாதங்களாக ரஷீதா கிடந்த வீரபாண்டி பேருந்து நிலையம் இருக்கும் பகு தியில்தான் அவரது கணவர் குடும்பத்தினர் வசித்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள், ரஷீதாவை கண்டுகொள்ளவில்லை. தனது மூன்று குழந் தைகளின் நிலை என்ன என்பதும் ரஷீதாவுக்குத் தெரியவில்லை.இதில்  அடுத் த கொடுமை “சமூகசேவை” கொடுமை. அதையும் தெய்வராஜே சொல்கிறார்:

 

“திருப்பூர் பகுதியில் இருக்கிற பல ஆதரவற்றோர் இல்லங்களை அணுகி இந்த பெண்மணியை சேர்த்துக்க உதவி கேட்டோம். மறுத்துட்டாங்க…

சமூகநலத்துறை அதிகாரிகளை அணுகினோம். அவங்களும் கண்டுக்கலை. பி றகு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருக்கும் நமது இல்லம் காப் பகத்துல சேர்த்தோம்!”

பெற்றோர், கணவர் வீட்டார், உறவினர் அத்தனை பேராலும் கைவிடப்பட்டு, நடைப்பிணமான நிலையிலும் காமுகர்களின் இச்சை தீர்க்கும் பாவப்பட்ட கரு வியான அந்த ரஷீதா, இந்த உலத்தைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்?
Tags:
Privacy and cookie settings