ராணுவத்தில் லெப்டினன்ட் கலோனல் என்ற கவுரவ பொறுப்புடன் இருக்கும் கேப்டன் டோனி 69-வது சுதந்திர தினத்தை யொட்டி
ராணுவ சீருடையில் சல்யூட் என்று தன்னை தானே செல்பி எடுத்து கொண்ட போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டு உலக கோப்பையை வென்றுத்தந்த பெருமைக்குரிய இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு
கடந்த 2011ம் ஆண்டு ராணுவத்தில், லெப்டின ன்ட் கலோனல் என்ற கவுரவ பொறுப்பு வழங்கப்பட்டது.
அப்போது ‘உண்மையிலேயே இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந் திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கூட ஏதாவது ஒரு விதத்தில் ராணு வத்தில் சேவையாற்ற விரும்புகிறேன் என்று டோனி பெருமிதத்துடன் கூறினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டதால் இப்போது அவருக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது.
இதையடுத்து ராணுவம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள டோனி, ஆக்ராவில் உள்ள பாராசூட் பயிற்சி பள்ளிக்கு கடந்த 5–ந்தேதி வந்தார்.

அங்கு உயர்மட்ட இந்திய ராணுவ பாராசூட் பிரிவு வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
2 வார கால பயிற்சிக்கு பிறகு டோனி 5 முறை பாராசூட்டில் இருந்து குதித்து சாகசம் புரிவார் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சிதன்ஷு கார் கூறினார்.
Tags: