பயாப்சி செய்வது என்பது என்ன? #biopsy

பயாப்சி என்பது திசுப் பரிசோதனை, பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சிறிது திரவம் அல்லது திசுவை எடுத்து மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்து தீர்மானமான முடிவுக்கு வரும் வழிதான் பயாப்சி.
பயாப்சி செய்வது என்பது என்ன? #biopsy
இதில் ஒரு வகை, FNAC எனப்படும் Fine Needle Aspiration Cytology மெல்லிய ஊசி கொண்டு திரவம் எடுத்துச் செய்யும் பரிசோதனை இது.

உடலில் உள்ள கட்டியில் ஊசியை செலுத்தி திரவத்தை உறிஞ்சி எடுப்பர். அதில் உறிஞ்சி எடுக்கப்படும் திரவமானது கண்ணாடி சில்லுகளில் பரப்பப்படும்.
பின்னர் வேறொரு பரிசோதனை திரவத்துடன் கலக்கப்படும். அதன் பிறகு சைட்டாலஜிஸ்ட் என்கிற செல்களை பரிசோதிக்கும் நிபுணரிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த சோதனை மிகவும் எளிது. ஆனால் முடிவுகளை கீழே சொல்லப் பட்ட விஷயங்கள் பாதிக்கக் கூடும். 

1. சோதனைக்குப் போதுமான திரவம் கிடைக்காமல் போகலாம். 
பயாப்சி செய்வது என்பது என்ன? #biopsy
2. நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து அந்த திரவம் எடுக்கப்படாமல் போகலாம்.
காச நோய் (TB) இருக்குமா? காசநோய்க் கிருமிகள் உடலின் எந்தப் பகுதியை வேண்டு மானாலும் தாக்கி, பாதிப்பை ஏற்படுத்தலாம். 

இருப்பினும் முக்கியமான நோய், நுரையீரலைப் பாதிக்கும் எலும்புருக்கி நோயாகும். 

அறிகுறிகள்

* மூன்று வாரங்களுக்கு மேலான இருமல்

* பசியின்மை மற்றும் எடை குறைதல், மாலையில் காய்ச்சல் அதிகமாகத் தெரிதல்
* உடல் சோர்வு

* இரவில் அதிமான வியர்வை பெருகுதல்
பயாப்சி செய்வது என்பது என்ன? #biopsy
* இருமலின் போது சளியுடன் சில சமயங்களில் ரத்தம் கலந்து வருதல். இவையிருந்தால் காசநோய் இருக்கலம் என்பதை உறுதிப்படுத்தலாம்.

* காச நோய் இருப்பவர்கள் சளியை கண்ட இடங்களில் துப்பக்கூடாது
* மூக்கையும் வாயையும் இரு கைகளாலும் மூடியபடி இரும வேண்டும்.

* குடும்பத்தில் ஒருவருக்கு காசநோய் இருந்தால், குடும்ப உறுப்பினர் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings