கனமழை வெள்ளத்தில் ரேசன் கார்டுகளை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகளை உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால், பாடபுத்தகங்கள், நோட்டுக்களை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னரே அனைத்து துறை அதிகாரிகளும் எனது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும், ஓரிரண்டு தினங்களிலேயே மழை மிக அதிகளவு கொட்டி தீர்த்து விட்டதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டன.
பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றி, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை அமைச்சர்களின் மேற்பார்வையில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்பு பணிகளுக்கும் என 500 கோடி ரூபாய் ஒதுக்கி நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன்.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்புக்கு பின் இந்த ஆய்வின் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுகள் விவசாய பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும் என்று நான் எனது 18.11.2015 அன்றைய அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி மற்றும் கால்நடை இழப்பு, படகுகள் இழப்பு ஆகியவையும் கணக்கிடப்பட்டு இந்த இழப்புகளுக்கான நிவாரண தொகையை விரைந்து வழங்கிட நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் எனது அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.
தமிழகத்தில் பெய்த கன மழையால் சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால், மாணாக்கர்களின் பாட புத்தகங்கள் சேதமடைந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. மாணாக்கர்களின் கல்விக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
எனவே, மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணாக்கர்கள் அனைவருக்கும் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், சீருடை ஒன்றும் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த கன மழை வெள்ளம் காரணமாக பலர் தங்களது பொது விநியோக குடும்ப அட்டைகளை இழந்து விட்டதாக நான் அறிகிறேன். அவ்வாறு குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகளை உடனடியாக வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.